
ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரிக்கும் அண்ணாத்த படத்தை இயக்குகிறார் இயக்குனர் சிவா.
ரஜினியுடன் இணைந்து மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ஜாக்கி ஷெராப்,சூரி,சதீஷ், ஜெகபதிபாபு, பாலா, கருணாகரன் என மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருக்கும் இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்க ஒளிப்பதிவாளர் வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டாரின் புதிய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
ஒளிப்பதிவாளர் வெற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]#Annaatthe #அண்ணாத்த pic.twitter.com/RBV5ETcuVc
— Vetri Palanisamy (@vetrivisuals) August 25, 2021