வெங்கட் பிரபு மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த படம் ‘கசட தபற’.

இதில் இயக்குநர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, சாந்தனு, சந்தீப் கிஷன், ஹரிஷ் கல்யாண், ரெஜினா, விஜயலட்சுமி, ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒரே கதையில் 6 பகுதிகள் கொண்டதாக உருவாக்கி இயக்கியுள்ளார் சிம்புதேவன்.

2019-ம் ஆண்டிலேயே இந்தப் படம் தயாராகிவிட்டது. ஆனால், தொடர் கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.

‘கசட தபற’ படம் நேரடியாக ஓடிடியில் வருகிற ஆகஸ்ட் 27 ஆம் தேதி
வெளியாகிறது. சோனி லைவ் ஓடிடி நிறுவனம் இந்தப் படத்தின் உரிமையைக் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் தற்போது கசடதபற திரைப்படத்தின் புதிய பாடல் வெளியானது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் வாழ்வோமே எனும் புதிய பாடல் தற்போது வெளியாகியுள்ளது.