சினிமா படப்பிடிப்பு, திரையரங்குகள் திறக்க தற்போது அனுமதி கிடையாது.. அமைச்சர் கடம்பூர் ராஜு

Must read

சென்னை;
மிழகத்தில் சினிமா படப்பிடிப்பு நடத்தவோ, திரையரங்குகள் திறக்கவோ  தற்போது அனுமதி  வழங்க முடியாது என்று அமைச்சர்  கடம்பூர் ராஜு தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா லாக்டவுன் ஆகஸ்டு 31ந்தேதி வரை தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி வழங்க கோரி தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் தமிழகஅரசிடம் மனு கொடுத்திருந்தனர். ஆனால், தளர்வுகளின்போது திரையுலகினர் பிரச்சினை குறித்து தமிழகஅரசு ஏதும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில்  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, “தற்போதைய சூழலில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்க இயலாது என்று கூறியவர்,  “சின்னத்திரை படப்பிடிப்பு நடைபெற உள் அரங்கு போதுமானது” அதனால் அனுமதி வழங்கப்பட்டது என்று தெரிவித்தார்.

மேலும், சினிமா திரைப்பட படப்பிடிப்புக்கு திரைத்துறையினர் அனுமதி கோரியிருந்தனர். ஆனால் சினிமா படப்பிடிப்பு வெளிப்புறங்களில் நடைபெறும் போது மக்கள் கூட்டம் கூட வாய்ப்பு தற்போது திரைப்பட படப்பிடிப்புகளை நாங்கள் அனுமதிக்க வாய்ப்பில்லை, அதுபோல திரையரங்குகள் திறக்கவும் அனுமதி வழங்கவில்லை என்ற  தெரிவித்துள்ளார்.

More articles

Latest article