இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் 24 ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது முதல் திரையரங்குகளும் நாடு முழுவதும் மூடப்பட்டன.
தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், வரும் 15 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகளைத் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
திரையரங்கு முழுவதும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும். ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சி தொடங்கும் முன்பாக முழுமையாக கிருமி நீக்கம் செய்ய வேண்டும். ஒரு இருக்கை இடைவெளி விட்டு அமர அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்களை மட்டுமே விற்க வேண்டும். ஆன்லைன் டிக்கெட் விற்பனையை ஊக்குவிக்க வேண்டும்
முகக்கவசம் எப்போதும் அணிந்திருக்க வேண்டும்.ஒரேயொரு திரை மட்டுமேயுள்ள திரையரங்குகள் டிக்கெட் கவுண்ட்டர்களை திறக்கலாம்.
அனைத்து குளிரூட்டப்பட்ட திரையரங்குகளும் அரங்கினுள் 23 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்ப நிலையை பராமரிப்பது அவசியம் என கூறப்பட்டுள்ளது .
இந்நிலையில் தமிழக அரசு இதுவரை திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கவில்லை. திரையரங்குகளை திறப்பது மாநில அரசின் முடிவு என்று என ஏற்கனவே மத்தியஅரசு அறிவித்து உள்ளது. ஆதலால் தமிழக அரசு தான் இதை பற்றின முடிவெடுக்க வேண்டும் .