ராஜூ முருகன் ரகசிய திருமணம் செய்தது ஏன்?: பின்னணி தகவல்

Must read

“குக்கூ” என்ற படத்தின் மூலம் திரைப்பட இயக்குநராக அறிமுகமானவர் ராஜூ முருகன். சமீபத்தில் இவர் இயக்கிய “ஜோக்கர்” திரைப்படம் வெளியாகி பரவலான வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் தனது நீண்டநாள் தோழியான ஹேமா சின்ஹாவை இன்று திடீர் திருமணம் செய்துகொண்டார் ராஜூ முருகன்.  இந்த செய்தியை காலையில் வெளியிட்டிருந்தோம்.
திடீரென ராஜூமுருகன் ரகசிய திருமணம் செய்தது ஏன்  அவரது நண்பர்கள் வட்டாரங்கள் தெரிவிப்பதாவது:
ஹேமா சின்ஹா, மதுரையைச் சேர்ந்தவர். கடந்த பல வருடங்களுக்கு முன்  ராஜ் டிவியிலும் பிறகு சன் டிவியிலும் தொகுப்பாளினியாக இருந்தவர். ஒருகட்டத்தில் அமெரிக்க மாப்பிள்ளையை திருமணம் செய்துகொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். இடையே கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட, விவாகரத்து செய்தார்கள்.
a
இதற்கிடையே ஹேமாவுக்கும் ராஜூ முருகனுக்கும் அறிமுகம் ஏற்பட்டு, அது நட்பாகி காதலாக கனிந்தது. ஹேமாவுக்கு டைவர்ஸ் கிடைக்கட்டும் என்று ராஜூ முருகன் காத்திருந்தார். கிடைத்தவுடன், தற்போது உடனடியாக திருமணம் செய்துகொள்ள இருவரும் முடிவெடுத்தார்கள்.  இதற்கு இருவர் குடும்பத்திலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆகவேதான் பலருக்கும் தகவல் சொல்லாமல், நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்து திருமணம் நடந்தது. முதலில் குன்றத்தூர் முருகன் கோயிலில் திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் இன்று அதிகாலை திடீரென முடிவை மாற்றி பெசன்ட் நகர் முருகன் கோயிலில் திருணம் எளிமையான முறையில் நடந்தது” என்று ராஜூ முருகனுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரபல திரைப்பட இயக்குநர் பாலா, தலைமையில் திருமணம் நடந்தது. மணமகளஅ ஹேமானின் நண்பரான பிரபல கவிஞர் மனுஷ்யபுத்திரன் நேரில் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினார்.
எழுத்தில் மட்டுமல்ல.. வாழ்க்கையிலும் அதே போல புரட்சிகரமாக செயல்பட்ட ராஜூ முருகன் பாராட்டத்தக்கவர்தான். மணமக்கள் வாழ்வாங்கு வாழ, நாமும் வாழ்த்துவோம்!

More articles

Latest article