ஜெயா பிலிம்ஸ் தயாரிப்பில்  “அமாவாசை “எனும் புதிய திரைப்படம் திரைக்கு வர தயார் நிலையிலுள்ளது.
தற்போதைய ட்ரண்ட் ஆன  திரில்லர் படம்.
இப்படத்தின் கதாநாயகர்களாக  ஜெய்ஆகாஷ் , நுபுர் மேத்தா , ராஜேஷ் விவேக் , ஜீவா , ஷ்ராவன் , ஆகியோர் நடித்துள்ளார். கதாநாயகிகளாக சாக்க்ஷி ,ஷோகன் , ப்ரீத்தி சிங், தன்யா மௌரியா ,முமைத்கான் ,ரூபி கான்,சீமாசிங் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் கோட்டா ஸ்ரீனிவாச ராவ்  ஆகியோர் நடிக்கின்றனர்.
Amaavasai-9
இப்படத்தின் படப்பிடிப்பு  ராஜஸ்தான் , உதய்பூர், ஜோத்பூர், சென்னை  மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படமாக்கப்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் இசையப்பாளரான சையத் அஹமத்  இசையில் 6 பாடல்கள் இடம் பெற்றுள்ளன .சென்னை ஸ்டார் ஸ்டுடியோவில் காட்சிகளுக்கு நாராயண பாபுவால் டப்பிங் செய்யப்பட்டு , ஒரு  பாடலுக்கு பாடகர் கானா வினோத் பாடியுள்ளார் .
இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியிடப்படுகிறது. அனைத்துக்கட்ட படப்பிடிப்புகளும் முடிவுற்ற நிலையில் இந்தப்படம்  ஆகஸ்ட்  மாதம் 2016 ல் திரைக்கு வருகிறது.