கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்..!

Must read

நெல்லை: கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, அவர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பாரத மாதா, இந்துக்கள், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மட்டுமின்றி,  திமுகவின் வெற்றி நாங்கள் போட்ட பிச்சை என்று அருவறுக்கும் வகையில் அவதூறாக பேசிய கிறிஸ்தவ மத போதகர் ஜார்ஜ் பொன்னையா மீது ஏராளமான பகுதிகளில் புகார்கள் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, தலைமறைவான பாதிரியார் இன்று மதுரை அருகே கைது செய்யப்பட்டார்.

அவரை காவல்துறையிர் நாகர்கோவில் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவரை குழித்துறை குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினார்.  சமூக அமைதியை குலைக்கும் விதமாக பேசியதாக கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து குழித்துறை குற்றவியல் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை தொடர்ந்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட உள்ளார்.

More articles

Latest article