பிரவுன் கலரில் புதிய 10 ரூபாய் நோட்டுகள்! ரிசர்வ் வங்கி தகவல்

Must read

டில்லி,

நாடு முழுவதும் புதிய பழுப்பு நிறத்திலான 10ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்ய இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு அறிவித்த பணமதிப்பிழப்பு காரணமாக பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாததாகின.  இதற்கு பதிலாக  புதிய 500 ரூபாய், 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு விடப்பட்டன.

பின்னர் அதைத் தொடர்ந்து புதிய 200 ரூபாய்,  மற்றும் 50 ரூபாய் நோட்டுகளும் வெளியானது. அதேபோன்று விரைவில்  புதிய 10 ரூபாய் நோட்டும் வெளியிடப்படும் என மத்திய ரிசர்வ் வங்கி  தெரிவித்துள்ளது.

இந்த புதிய 10 ரூபாய் பழுப்பு (சாக்லேட் பிரவுன்) நிறத்தில் வெளியிட இருப்பதாக மத்திய ரிசர்வ வங்கி தெரிவித்துள்ளது. இந்த நோட்டுகளில் முன் பகுதியில் மகாத்மா காந்தியின் படமும், பின் பகுதியில் யானை, புலி மற்றும் காண்டாமிருகத்தின் படமும் இடம் பெற்றிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய 10 ரூபாய் நோட்டு விரைவில் புழக்கத்திற்கு விடப்படும் என்றும், இதன் காரணமாக  பழைய 10 ரூபாய் நோட்டுக்கு எந்த பிரச்சினை கிடையாது… அது வழக்கம்போல  செல்லும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

More articles

Latest article