‘பொன்னியின் செல்வன்’, ‘கோப்ரா’ ஆகிய படங்களை முடித்துவிட்டு, கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள ‘சீயான் 60’ படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் விக்ரம். இது ஒரு ஆக்ஷன் த்ரில்லராக தயாராகி வருகிறது.

‘கோப்ரா’ தயாரிப்பாளர் லலித் குமாரே இந்தப் படத்தையும் தயாரிக்கவுள்ளார். விக்ரமுடன் அவருடைய மகன் துருவ் விக்ரமும் இணைந்து நடிக்கவுள்ளார். இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படமாக இது அமையவுள்ளது.

இதில் நாயகிகளாக வாணி போஜன் மற்றும் சிம்ரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக இளம் ஒளிப்பதிவாளர் ஷ்ரேயஸ் கிருஷ்ணா இணைந்துள்ளார்.

தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி, சீயான் 60 இல் துருவ் விக்ரம் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து நேபாள் எல்லைப் பகுதியில் சில முக்கியமான காட்சிகளை எடுக்கின்றனர். அத்துடன் மொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என்கின்றன செய்திகள்.