தஞ்சை:
லகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது.

கடந்த 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், இன்று வெகுவிமரிசையாக தேரோட்டம் நடைபெற்றது.
ஆயிரம் ஆண்டுகள் பழமையான தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது. கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த ஆலயம் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது.

பாரம்பரியம் கொண்ட இந்த ஆலயத்தைக் காண வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தேரோட்டமும் நடைபெற்று வருகிறது.

சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும் நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவால்,இந்த பிரசித்தி பெற்ற கோவிலின் தேரோட்டம் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கொரோனா குறைந்து மீண்டும் இயல்பு வாழ்க்கை படிப்படியாக திரும்பி வரும் நிலையில் உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது.

2 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.