உச்ச நட்சத்திரங்களின் படப்பிடிப்பில் என்ன நடக்கிறது என்பது, அந்த படம் ரிலீஸ் ஆகும் வரை ரகசியமாக வைக்கப்படுவது வழக்கம்.
ஆனால் சிரஞ்சீவி, தான் நடித்து வரும் ‘ஆச்சார்யா’ படத்தின், படப்பிடிப்பு தளத்தில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தை தானே செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளார்.
ஆச்சார்யா படத்துக்காக ஐதராபாத் புறநகர் பகுதியில் 20 ஏக்கர் பரப்பில் கோயில் நகரத்தை கலை இயக்குநர் சுரேஷ் செல்வராஜ் நிர்மாணித்துள்ளார்.
எந்த ஒரு இந்திய படத்துக்கும் இதுபோன்று, பிரமாண்டமாக கோயில் நகர அரங்கு அமைக்கப்பட்டதில்லை என படக்குழுவினர் வியப்புடன் தெரிவித்து வரும் நிலையில், அந்த அரங்கத்தை சிரஞ்சீவியே படம் பிடித்து வெளியிட்டுள்ளார்.
ஆச்சார்யா பட இயக்குநர் கொரட்டல சிவா, மற்றும் கலை இயக்குநர் சுரேஷ் ஆகியோரை, அந்த வீடியோவில், சிரஞ்சீவி வெகுவாக புகழ்ந்துள்ளார்.
– பா. பாரதி