’80ஸ் ரீயூனியன்’ ராதா டான்ஸுக்கு சிரஞ்சீவி பாராட்டு… வைரலான வீடியோ

Must read

மும்பையில் சமீபத்தில் நடந்த ’80ஸ் ரீயூனியன்’னில் கலந்து கொண்டு நடனமாடிய ராதா அந்த வீடியோவை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

’80களில் முன்னணி நடிகர் நடிகைகளாக வலம் வந்த தென்னிந்திய மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் சமீபத்தில் மும்பையில் கூடி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

’80ஸ் ரீயூனியன்’ என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வின் 11-வது ஆண்டு கொண்டாட்டம் மும்பையில் நவம்பர் 13 ம் தேதி நடைபெற்றது.

இதற்கு முன் 10வது ஆண்டு கொண்டாட்டம் 2019-ல் சிரஞ்சீவி-யின் ஹைதராபாத் இல்லத்தில் நடைபெற்றது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இரண்டு ஆண்டுகளாக நட்சத்திரங்களின் சந்திப்பு நடைபெறாமல் இருந்தது.

இந்த முறை பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான பூனம் தில்லான் மற்றும் ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் நடிகர் நடிகைகளுக்கு விருந்து உபசரிப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

ராஜ்குமார், சரத்குமார், சிரஞ்சீவி, பாக்யராஜ், வெங்கடேஷ், அர்ஜுன், ஜாக்கி ஷெராஃப், அனில் கபூர், சன்னி தியோல், சஞ்சய் தத், நரேஷ், பானுச்சந்தர் ஆகிய நடிகர்களும்

சுஹாசினி, குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன், லிஸ்ஸி, பூர்ணிமா, ராதா, அம்பிகா, சரிதா, சுமலதா, ஷோபனா, ரேவதி, மேனகா, பூனம் தில்லான், நதியா, மீனாட்சி சேஷாத்திரி உள்ளிட்ட நடிகைகளும் கலந்து கொண்டனர்.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article