இரண்டானது லோக்ஜன சக்தி: 5எம்.பி.க்களை கட்சியிலிருந்து நீக்குவதாக சிராக் பஸ்வான் அறிவிப்பு…

Must read

பாட்னா: லோக்ஜனசக்தி கட்சி தலைவர் பதவியில் இருந்து, சிராக் பஸ்வாiனை நேற்று அதிரடியாக நீக்கிவிட்டு, கட்சியை கைப்பற்றினார் அவரது சித்தப்பா பசுபதி குமார் பராஸ். இந்த நிலையில், சிராக் பஸ்வான், எதிர்ப்பு காட்டிய 5 எம்பிக்களையும் கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்து உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லோக்சக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு பிறகு அக்கட்சியின் தலைவராக, ராம்விலாஸ் பஸ்வான் மகன் சிராக் பஸ்வான் கைக்கு வந்தது.  இதனால் கட்சிக்குள் குழப்பம் நீடித்து வந்தது. கடந்த சில நாட்களாக சிராக் பஸ்வானுக்கும், அவரது சித்தப்பா பசுபதி குமார் பராஸ் இடையே மோதல் நீடித்து வந்தது. இதையடுத்து,லோக்ஜனசக்தி எம்.பி.க்களான பசுபதி குமார் பராஸ் உள்பட 5 எம்.பி.க்கள் சிராக்குக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். மேலும் லோக் ஜன்சக்தி கட்சியின் நாடாளுமன்ற மக்களவையின் தலைவராக உள்ள சிராக் பஸ்வானுக்கு பதிலாக பசுபதி குமார் பராஸை அந்த கட்சியின் எம்.பி.க்கள் தேர்வு செய்து, அது தொடர்பாக பாராளுமன்ற சபாநாயகரிடமும் கடிதம் கொடுத்துள்ளனர். இது மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,நேற்று , லோக் ஜனசக்தியின் தேசிய தலைவர் பதவியிலிருந்து சிராக் பஸ்வானை அதிரடியாக நீக்கியதுடுன், கட்சியின் செயல் தலைவராக சூரஜ் பன்னை தேர்வு செய்தனர். இதனால் லோக்ஜனசக்தி 2வது உடைந்தது உறுதியானது.

இந்த நிலையில்,  லோக் ஜன்சக்தி கட்சியின் தலைவரான சிராக் பஸ்வான் , பசுபதி குமார் பராஸ் உள்பட 5 எம்.பி.க்களை கட்சியிலிருந்து நீக்கி அறிவித்து உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த லோக் ஜன்சக்தி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராஜூ திவாரி,  கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் இன்று டைபெற்றது. அதில் 5 எம்.பி.க்களையும் கட்சியிலிருந்து நீக்க முடிவு செய்யப்பட்டது என்று தெரிவித்தார்.

 

More articles

Latest article