தமிழ் சினிமாவில் #METOO புகார் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியவர பின்னணி பாடகி சின்மயி சமூகவலைதளங்களில் இவரின் நடவடிக்கைகளுக்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும் சில எதிர்மறையான கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சின்மயியின் தாயார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு தேவதாசி முறையை ஆதரித்துப் பேசினார்.அந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

“தேவதாசி முறை என்பது இந்த பாரத தேசத்துக்கு சொந்தமானது. அது மிகச்சிறந்த சிஸ்டம். அதை சிதைத்ததால் நான் பெரியாரை மன்னிக்க மாட்டேன்” என்று அதில் கூறியுள்ளார் சின்மயியின் தாயார். இதை பலரும் சின்மயிக்கு Tag செய்து நீங்கள் தேவதாசியா என கேட்ட வண்ணம் உள்ளனர் .

தனது தாயார் தெரிவித்த கருத்துக்காக சின்மயி மன்னிப்பு கோரியுள்ளார்.மேலும் ”தேவதாசி முறையை நான் முற்றிலுமாக எதிர்க்கிறேன். என்னுடைய அம்மாவுடைய கருத்துல எனக்கு உடன்பாடில்ல. எங்க அம்மாவுடைய கருத்துகளால என்ன தேவதாஸி ஆகுன்னு சொல்றது நியாயமும் இல்லை. அவர்கள் செயலுக்கு அவங்கதான் பொறுப்பு. ஆனாலும் நான் மன்னிப்பு கேட்கிறேன்” என்று கூறியுள்ளார்.