சென்னை

சென்னைக்கு வந்த சீன பயணிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதால் அவருக்குச் சிறப்பு வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சீனாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு உலகின் பல நாடுகளுக்கும் பரவி வருகிறது.  இந்தியாவில் கேரள மாநிலத்தில் சீனா சென்று வந்த இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  தமிழகத்தில் சென்னை விமான நிலையத்துக்கு வரும அனைத்து பயணிகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இன்று காலை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமான பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது.   இந்த சோதனையில் சீன நாட்டினரான லுவிஜின் என்னும் 47 வயது சீனருக்கு கொரோனா வைரஸ் உள்ளது தெரிய வந்தது.  இதையொட்டி அவர் தனிமைபடுத்தப்பட்டு சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லபட்ட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனையில் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்ட லுவிஜினுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.   சீன தூதரகத்துக்கு இந்த தகவல் அளிக்கப்பட்டுள்ளது.  லுவிஜின் சீனாவில் இருந்து ஹாங்காங் சென்று அங்கிருந்து மலேசியா வழியாகச் சென்னை வந்துள்ளார்.