கோ ரங்கொ

ஹெலிகாப்டர் விபத்தில் சிலி நாட்டின் முன்னாள் அதிபர் செபஸ்டின் பினிரா மரணம் அடைந்துள்ளார்.

சிலி நாடு தென் அமெரிக்காவில் அமைந்துள்ளது.  சிலி நாட்டின் முன்னாள் அதிபர் செபஸ்டின் பினிரா (வயது 74) 2010 முதல் 2014 வரை மற்றும் 2018 முதல் 2022 வரை என இரண்டு முறை சிலி அதிபராகப் பதவி வகித்தார்.

நேற்று அந்நாட்டின் பிரபல சுற்றுலாத் தலமான லகோ ரங்கொ பகுதிக்கு செபஸ்டின் பினிரா ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டார். ஜெபஸ்டின் உள்பட மொத்தம் 4 பேர் அந்த ஹெலிகாப்டரில் பயணித்தனர்.

ஹெலிகாப்டர் லகோ ரங்கொ அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளானது. விபத்தில் செபஸ்டின் பினிரா உயிரிழந்தார். அவருடன் ஹெலிகாப்டரில் பயணித்த எஞ்சிய 3 பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் மற்றும் செபஸ்டின் பினிரா உடன் பயணித்த 3 பேர் யார்? என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.