கொழும்பு

லங்கை காவல்துறையினர் குற்றங்களைத் தடுக்க 50 நாட்களில் 50000 பேரைக் கைது செய்துள்ளனர்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் தேதி அன்று இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் தேசிய குற்றத்தடுப்பு நடவடிக்கையை இலங்கை காவல்துறையினர் தொடங்கினர்.

இதையொட்டி, நாடு முழுவதும் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 56,000 நபர்களை 50 நாட்களில் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக இலங்கை அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கைதானவர்களில் 49,558 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காகவும், மீதம் உள்ள நபர்கள் மற்ற குற்றச்செயல்களுக்காகவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 2.3 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதானவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் சந்தை மதிப்பு சுமார் 25 மில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.