வாஷிங்டன்: 2026 ஃபிபா கால்பந்து உலக்கோப்பைக்கான போட்டி  விவரங்களை சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் (FIFA ) அறிவித்துள்ளது.

2026ம் ஆண்டு நடைபெற உள்ள 23வது  ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை, மெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள்  இணைந்து நடத்துகின்றன. தொடக்க ஆட்டம் ஜூன் 11, 2026 அன்று மெக்சிகோ சிட்டியில் உள்ள எஸ்டேடியோ அஸ்டெகாவில் நடைபெறும் என்று ஃபிஃபா தெரிவித்துள்ளது.   இந்த ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை 2026 போட்டியில் 48 அணிகள் பங்கேற்க உள்ளது.  கடந்த உலகக் கோப்பையில் 32 அணிகள் பங்கேற்ற நிலையில், தற்போது அதிக அளவிலான அணிகள் பங்கேற்கிறது.

கடந்த  22-வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கோலாகலமாகத் நடைபெற்றது இதில்  32 நாடுகள் பங்கேற்றன.   பல்வேறு கட்ட போட்டிகளைத் தாடர்ந்து,   பிரான்சும், அர்ஜெண்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. பரபரப்பாக சென்ற இறுதிப்போட்டி ஆட்ட நேர முடிவில்  இரு அணிகளும் சமநிலையில் இருந்தது.  இதனால் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள், ஆவலுடன் இருக்கையின் நுனியில்அமர்ந்து வெற்றிக்கனியை பறிக்கப்போவது யார் என ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.  அப்போது, நடுவர்,  பெனால்டி கிக் முறையில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் வகையில் ஆட்டத்தை தொடங்கினால். இதில், இதில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி,  4-2 என்ற கணக்கில்  மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றது சாதனை படைத்தது. இதன்மூலம், மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை அர்ஜென்டினா கைப்பற்றியது.

இதைத் தொடர்ந்து வரும் 2026-ம் ஆண்டு 23வது பிஃபா உலக கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த  ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரை அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் கூட்டாக நடத்துகின்றன. முந்தைய உலககோப்பைகளில் 36 அணிகள் பங்கேற்ற நிலையில். 2026-ம் ஆண்டுஉலகக்கோப்பையில் 48 அணிகள் பங்கேற்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, தற்போது, 2026 ஃபிபா கால்பந்து உலக்கோப்பைக்கான விவரங்களை சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் (FIFA ) அறிவித்துள்ளது.

அதன்படி,  கால்பந்து உலகக் கோப்பை 2026-  தொடர் மொத்தம் 104 இடங்களில் நடைபெறவுள்ளது.  கால்பந்து உலகக் கோப்பை 2026 தொடரின் முதல் ஆட்டம் 2026ம் ஆண்டு  ஆண்டு ஜுன் 11ம் தேதி மெக்சிகோவின் அஸ்டெகா மைதானத்தில் தொடங்கவுள்ளது. தொடக்க ஆட்டம் வரை இறுதிஆட்டம் வரை 104 போட்டிகள் நடைபெற உள்ளன.

இறுதிப்போட்டி ஜுலை 19ம் தேதி, அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள ருதர்ஃபோர் நகரின் மெட்லைஃப் மைதானத்தில் நடைபெற உள்ளது. அமெரிக்காவின் அட்லாண்டா மற்றும் டெல்லாஸ் பகுதிகளில் அரையிறுதி போட்டிகளும், மூன்றாவது இடத்திற்கான போட்டி மியாமியிலும் நடைபெற உள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ், கன்சாஸ் சிட்டி, மியாமி மற்றும் டன் ஆகிய இடங்களில் காலிறுதி போட்டிகள் நடைபெறவுள்ளது.

இந்த தொடரின்  13 போட்டிகள் கனடாவில் நடைபெறும். இதில் 10 முதல் சுற்று போட்டிகள் அடங்கும். ரொறன்ரோ மற்றும் வான்கூவர் நகரங்களில் தலா 5 போட்டிகள் நடைபெற உள்ளது.

மெக்சிகோவிலும் முதல் சுற்று போட்டிகள் 10 உட்பட மொத்தம் 13 போட்டிகள் நடைபெற உள்ளன. குவாடலஜாரா மற்றும் மான்டேரியில் தலா 5 முதல் சுற்று போட்டிகள் நடைபெறும்.

மீதமுள்ள போட்டிகள் அனைத்தும் அமெரிக்காவில் உள்ள 11 நகரங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டொராண்டோ, மெக்ஸிகோ சிட்டி மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய நகரங்களில், அந்தந்த தேசிய அணிகளின் தொடக்க ஆட்டங்கள் நடைபெற உள்ளது.

விளையாட்டுகளுக்கான கிக்ஆஃப் நேரத்தை FIFA இன்னும் அறிவிக்கவில்லை. இந்த உலகக் கோப்பையின் மூலம், மெக்சிகோ மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை நடத்தும் முதல் நாடு என்ற பெருமையை பெறுகிறது.