குழந்தைகள் இந்நாட்டின் செல்வங்கள் – ஒளிச்சுடர்கள்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் 

Must read

சென்னை: 
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குழந்தைகள் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்த இந்திய ஒன்றியத்தின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளைக் குழந்தைகள் தினமாகக் கொண்டாடி மகிழ்கிறோம். குழந்தைகள் இந்நாட்டின் செல்வங்கள் – ஒளிச்சுடர்கள்! ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு வகையில் திறமையானவர்கள், அழகானவர்கள்!  குழந்தைகளின் தனித் திறமைகளைக் கண்டறிந்து, அவர்களை வளர்த்தெடுப்போம். குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கி, மழைப்பருவத்தில் உலகை அச்சமின்றி அணுகிக் கற்கத் துணை நிற்போம்! குழந்தைகளைப் பாதுகாப்பது ஒட்டுமொத்தச் சமூகத்தின் கூட்டுச் செயல்பாடாகும். அவர்களுக்கு எதிரான பாலியல் – உளவியல் துன்புறுத்தல்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.

More articles

Latest article