லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி67 படத்தின் அப்டேட் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்துகொண்டு இருக்கிறது.

இந்தப் படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர் நடிகைகள் உள்ளிட்ட விவரம் அடுத்தடுத்த நாட்களில் வெளியானது.

நேற்று இந்தப் படத்தின் பூஜை நடைபெற்றது, இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் குழந்தை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தளபதி 67 படத்தில் நடிக்க இருக்கும் இந்தக் குழந்தை நட்சத்திரம் நகைச்சுவை நடிகர் அர்ஜுனன் என்பவரது மகள் என்று தெரியவந்திருக்கிறது.

‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்தில் சித்தார்த்-தின் நண்பனாக அறிமுகமான அர்ஜுனன் தொடர்ந்து ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘அரிமா நம்பி’, டிக் டிக் டிக் உள்ளிட்ட ஏராளமான படங்களில் தோன்றியிருக்கிறார்.

துல்கர் சல்மான் நடித்த ‘வாயை மூடி பேசவும்’ படத்தின் மூலம் பிரபலமான அர்ஜுனனின் மகள் இயல் இப்போது தளபதி 67 படத்தில் நடிக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது.