சென்னை: நாட்டிலேயே முதன்முறையாக சென்னை விமான நிலைய வளாகத்தில் 5 திரைகள் கொண்ட திரையரங்கம் திறக்கப்பட்டு உள்ளது. இதை நடிகர்கள் சதிஷ், ஆனந்த் ராஜ், கூல் சுரேஷ் உள்ளிட்டோர் மல்டிபிளெக்ஸ் திரையரங்கை திறந்து வைத்தனர்.

சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக அமைக்கப்பட்ட 5 திரைகள் கொண்ட பிவிஆர் திரையரங்கம் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.  விமான நிலையங்களில், பல நேரங்களில் விமானம் புறப்படுவதில் தாமதமாகும்போது, பயணிகள் பல மணி நேரம் வரை காத்திரும் நிலை ஏற்படும். அதுபோல காலக்கட்டத்தில் பொழுதுபோக்கிற்காக சென்னை விமான நிலையத்தில்,  5 திரைகள் கொண்ட திரையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இது,  இந்தியாவிலேயே முதல் முறையாக விமான நிலையத்துடன் இணைந்த மல்டிபிளெக்ஸ் திரையரங்கம் சென்னையில் திறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே  மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ரூ.250 கோடி செலவில் பன்னடுக்கு வாகன நிறுத்தும் இடம், வணிக வளாகம், திரையரங்கம், ஓட்டல்கள், கடைகளுக்கான கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு, சுமார்  2100 கார்கள் நிறுத்த கூடிய பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் பயன்பாட்டுக்கு வந்தது

இதைத்தொடர்ந்து பிவிஆர் தனியார் நிறுவனத்தின் சார்பில், சென்னை விமான நிலைய வணிக வளாகத்தின் 5 திரைகள் கொண்ட திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது.  இந்த திரையரங்கை, நடிகர்கள் சதிஷ், ஆனந்த் ராஜ், கூல் சுரேஷ் உள்ளிட்டோர் மல்டிபிளெக்ஸ் திரையரங்கை திறந்து வைத்தனர். அதனை தொடர்ந்து திரைப்படங்களின் முன்னோட்டங்கள் திரையிடபட்டன.  இந்த 5 திரையரங்குகளில் ஒரே நேரத்தில் 1155 பேர் அமர்ந்து திரைப்படங்களை கண்டுகளிக்கலாம்.