சென்னை: சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க வந்த பிரதமர் மோடியை வரவேற்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  போட்டி அரங்கிற்குள் நுழைந்தபோது முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென கால் இடறி தடுமாறினார். அவரை கைத்தாங்கலாக பிரதமர் மோடி தாங்கி பிடித்தார். இது தொடர்பான  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்னாச்சு என சமுக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. சமீபத காலமாக  அவரது நடவடிக்கைகளில் மாற்றம் தெரிவதுடன், மகன் உதயநிதியை கட்சி மற்றும் ஆட்சி சம்பந்தப்பட்ட  நிகழ்வுகளில் முன்னிலைப்படுத்து வதும், கடந்த சில நாட்களுக்கு முன்பு காரில் ஏறும்போது தடுமாறியது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சமீபத்தில் மருத்துவர் ஒருவர் முதலர்வரின் உடல்நலம் குறித்து அதிர்ச்சி தகவலை தெரிவித்த நிலையில், தற்போதைய நிகழ்வு அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.


நடப்பாண்டு தமிழ்நாட்டில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள நாடு முழுவதும் இருந்து வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் பல ஆயிரம் பேர் சென்னையில் முகாமிட்டு உள்ளனர். இந்த போட்டியின் தொடக்க விழா நேற்று (ஜனவரி 19ந்தேதி)  மாலை சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதற்காக பெங்களூருவில் இருந்து புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி மாலை சுமார் 5 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அங்கு தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் பலரும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு வந்த பிரதமர் மோடியை முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்றார். இதையடுத்து, இருவரும் நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்கு பேசிக்கொண்டு வத்நதனர். இருவரும் விழா அரங்கில் நுழைந்தபோது திடீரென ஸ்டாலின் கால் இடறி லேசாக நிலை தடுமாறினார். அப்போது அவருடன் வந்த பிரதமர் மோடி ஸ்டாலினை கைத்தாங்கலாக தாங்கிப் பிடித்துக்கொண்டார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இதை பாஜகவினர் டிரெண்டிங்காக்கி வருகின்றனர்.

கோலோ இந்தியா விளையாட்டு போட்டி தொடக்க விழாவில்  பிரதமர் மோடி,  முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், ஆளுநர் ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை நேரு விளையாட்டு அரங்கில் 20 நிமிடங்கள் சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அவர் அளித்ததாக கூறப்படுகிறது. மேலும் வெள்ள நிவாரண நிதி குறித்தும் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. பிரதமர் முதல்வர் சந்திப்பின் போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி உடனிருந்தார்.