சென்னை:
விவசாயிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று கலந்துரையாட உள்ளார்.

தமழிக மின்சார வாரியத்திடமிருந்து ஓராண்டில் ஒரு லட்சம் மின்சார இணைப்புகள் பெற்ற விவசாயிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று கலந்துரையாட உள்ளார்.
கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தார்.
அதன்படி, 2021 செப்டமர் முதல் தற்போது வரை ஓராண்டில் ஒரு லட்சம் மின்சார இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
இதையடுத்து, தமழிக மின்சார வாரியத்திடமிருந்து ஓராண்டில் ஒரு லட்சம் மின்சார இணைப்புகள் பெற்ற விவசாயிகளை இன்று காணொளி வாயிலாக சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின், விவசாய மின் இணைப்பிற்கான ஆணைகளை வழங்க உள்ளார்.
Patrikai.com official YouTube Channel