நாகர்கோவில்: குமரி மாவட்டம் நாகர்கோவிலில் மார்ச்  6-ந்தேதி தோள் சீலை போராட்ட மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பல நிகழ்சிகளிலும் முதலமைச்சர் கலந்துகொள்கிறார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 6-ந்தேதி குமரி மாவட்டம் வருகிறார். அன்று மாலை (6-ந்தேதி) நாகர்கோவிலில் நடைபெறும் தோள் சீலை போராட்ட மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். தொடர்ந்து,  இரவு கன்னியாகுமரியில் தங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறுநாள் 7-ந்தேதி காலையில் நாகர்கோவில் மாநகராட்சி புதிய அலுவலக கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.  அதைத்தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சியில், நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.

பின்னர் குமரி மாவட்டம், ஒழுகினசேரியில் உள்ள திமுக அலுவலகத்தில் 8½ அடி உயரத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் ழுழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

 முதலமைச்சர் ஸ்டாலின் வருகையை மாவட்ட நிர்வாகம், தூய்மை பணிகள், சாலை பணிகளை முடுக்கி விட்டுள்ளது. அதபோல, திமுக சார்பிலும் வரவேற்பு கொடுப்பது தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.  அதற்காக, திமக  மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை 26-ந்தேதி மாலை 4 மணிக்கு நாகர்கோவிலில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் மேயருமான மகேஷ் தலைமையில் நடைபெற உள்ளது.