சென்னை: தமிழ்நாட்டில் சிறந்த 10 கைவினை கலைஞர்களுக்கு பூம்புகார் மாநில விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
“பூம்புகார் மாநில விருது” திட்டம் தமிழக அரசின் கைத்தறி, கைவினைப்பொருட்கள், ஜவுளி மற்றும் காதி துறையால் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டின் கைவினை வளர்ச்சிக்கு பங்களித்த சிறந்த கைவினைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களை கவுரவிக்கும் வகையில், ரூ.₹50,000 ரொக்கப் பரிசு, 4 கிராம் தங்கப் பதக்கம், தாமிரபத்திரம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த விருது பெற தகுதியானர்வள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், அதாவது 60 வயது நிறைவடைந்தவர்கள், குறைந்த பட்சம் ₹3,500 மாதாந்திர ஓய்வூதியம் பெறும் நிலையில் உள்ளவர்கள்.
அதன்படி, நடப்பாண்டு பூம்புகார் விருதுகளுக்கு தேர்வான கலைஞர்களக்கு சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் விருதுகளை வழங்கி கரவுவித்தார்.
கைத்தறி தொழிலின் பங்களிப்பு, அபிவிருத்தி, படைப்புகளில் சிறந்த 10 கைவினைஞர்களுக்கு விருதுகள் வழங்கினார். அத்துடன், 65 வயதுக்கு மேற்பட்ட 9 கைவினைஞர்களுக்கு ‘வாழும் கைவினை பொக்கிஷம்’ விருதுகள் வழங்கப்பட்டன.