சென்னை: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, இன்று தமிழகஅரசின் சமூக நலத்துறை சார்பில் மகளிர் விழா கொண்டாடப்பட்டது. இதில்  முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மகளிருக்க விருதுகள் மற்றும் பணிநியமன ஆணைகளை வழங்கி கவுரவித்ததார். அப்போதுஇ,  பெண்களுக்கு சம உரிமை வழங்குவதில் தமிழ்நாடு அரசுதான் முன்னோடி மாநிலமாக உள்ளது என்றும் கூறினார்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் சென்னை எத்திராஜ் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் நடைபெற்றது. இதில்,

பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த கமலம் சின்னசாமிக்கு அவ்வையார் விருது வழங்கப்பட்டது.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த இளம்பிறை பெண் குழந்தை விருது பெறுற்றார்.

பெண்கள் முன்னேற்றத்திற்கு சிறப்பாக செயல்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு விருது திருவள்ளூர், நாகை, நாமக்கல் ஆகிய மாவட்ட ஆட்சியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

தமிழக  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினவிழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின்,  அவ்வையார் விருதை நீலகிரி கமலம் சின்னசாமி, பெண் குழந்தை விருதை சேலம் இளம்பிறைக்கு வழங்கினார். மேலும், மகளிருக்காக சிறப்பாக செயல்பட்ட திருவள்ளூர், நாகப்பட்டினம் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து கருணை அடிப்படையில் தமிழரசி, சுபா, சோபியா ஹரிணி, ராஜலட்சுமி ஆகியோருக்கு பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.

இதையடுத்து நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலினி, பெரியாருக்கு பெரியார் என்ற பட்டத்தை தந்தது பெண்கள்தான். பெண்களின் முன்னேற்றத்தைக் காண பெரியார் இல்லையே என் வருத்தாமாக உள்ளது. உல்கில் எந்நாளும் போற்றப்படக் கூடியவர்கள் பெண்கள்.

சமூக நலத்துறையை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை என மாற்றியுள்ளோம். பெண்களை அதிகாரமிக்கவர்களாக உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். வடமாநில பெண் ஒருவர் அடைக்கலம் தேடி வரும் அளவிற்கு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு. பெண் என்றால் ஆண்களுக்கு அடிமை என்ற சிந்தனை ஆண்கள் மனதில் இன்னமும் உள்ளது.

பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட இயக்கம் திராவிட இயக்கம். பெண்களுக்கு தன்னம்பிக்கை, துணிச்சல் தந்தது திராவிட இயக்கம்தான் என்று தெரிந்துகொள்ள வேண்டும்.

வரலாற்று படையெடுப்பால் பெண்கள் முடக்கப்பட்டனர். மேலும், வட மாநில பெண்கள் தமிழகத்திற்கு அடைக்கலம் தேடி வரும் அளவுக்கு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் உள்ளது. அனைத்து வகையிலும் பெண்களை முன்னேற்றி வருகிறது திராவிட மாடல் என்றார்.

பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டது திமுக ஆட்சியில்தான், அரசு பணிகளில் பெண்களுக்கு 40 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கியது திமுகஅரசுதான். இலவச பேருந்து சலுகை அல்ல, அது மகளிருக்கான உரிமை என்றவர், இலவச பேருந்து பயணம் மூலம் மாதம் ரூ.600 முதல் ரூ.1200 வரை பெண்கள் சேமிக்கிறார்கள் என்றவர்.

பெண்களை அனைத்து வகையிலும் முன்னேற்றி வருகிறது திராவிட மாடல் அரசு. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தில் ஒரு பெண் ஓதுவாரும் இடம்பெற்றுள்ளனர். திராவிட இயக்கம் தான் பெண்களை தன்னம்பிக்கை கொண்டவர்களாக ஆக்கியது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கை குழந்தைகளுடன் பல பெண்கள் பங்கேற்றனர் என குறிப்பிட்டார்.

பெண்களுக்கு சொத்து சம உரிமை வழங்கிய தலைவர் தான் கலைஞர். அரசு பணியில் பெண்களுக்கு ஒதுக்கீடு, 5ம் வகுப்பு வரை அரசு பள்ளி ஆசிரியர்களாக பெண்களை நியமித்தது திமுக ஆட்சியில் தான். பெண்களுக்குக்கான திருமண உதவி திட்டம் உள்ளிட்ட ஏரளமான திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது என பல்வேறு சிறப்புகள் குறித்து முதலமைச்சர் உரையாற்றினார்.

மேலும், அரசு பள்ளி மாணவிகளின் உயர்கல்விக்காக மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. பெண்களை அனைத்து வகையிலும் முன்னேற்றி வருகிறது திராவிட மாடல் அரசு என்றவர், பெண்களை ஒதுக்கி வைத்துவிட்டு எந்தவொரு திட்டமும் இல்லை.

பெண்களுக்கு சம உரிமை வழங்குவதில் தமிழ்நாடு அரசுதான் முன்னோடி மாநிலமாக உள்ளது என்றும் கூறினார்

இந்த விழாவில், அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு, கீதாஜீவன், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.