சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு  4 ஆண்டுகளை கடந்த  இன்று 5 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதற்கு அரசியல் கட்சியினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான திமுக  ஆட்சிபொறுப்பேற்றதிலிருந்து நேற்றுடன்  (6.5.2025) நான்காண்டுகள் நிறைவடைந்து, இன்று (மே 7ந்தேதி)  5 ஆம் ஆண்டு ஆட்சியில் தொடர்கிறது.


‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்ற ஒற்றை சொல் 7.5.2021 அன்று தமிழ்நாட்டையே அதிரவைத்தது. தி.மு.க 6 ஆவது முறையாக அறியணை ஏறியது. மகத்தான வரலாற்று வெற்றியுடன் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். அன்று தொடங்கி, நான்கு ஆண்டுகள் முடிந்து இன்று ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது திராவிட நாயகரின் திராவிட மாடல் ஆட்சி.

”வாக்களித்த மக்களுக்கு மட்டுமின்றி, வாக்களிக்காத மக்களும் இவர்களுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று நினைக்கக்கூடிய அளவிலான ஆட்சியை வழங்கிடுவோம்” என்று 2021 ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்தில் சொன்னார்.  இன்று அந்த வார்த்தையை மெய்பிக்கப்பட்டு வருகிறது. இந்த திராவிட மாடல் ஆட்சி உருவாக்கி கொடுத்த ஒவ்வொரு திட்டமும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் வெளிச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் அனைவரும் அன்போடு இந்த அரசை வாழ்த்தி வருகிறார்கள்.

ஏன் கொள்கை எதிரியாக இருக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசே, தமிழ்நாட்டு அரசின் பல திட்டங்களை பாராட்டி விருதுகளை வழங்கி வருகிறது. ஏழை, எளிய பள்ளிக் குழந்தைகளின் பசி ஆற்ற, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டம் தமிழ்நாட்டோடு நின்றுவிட வில்லை. தெலுங்கானா அரசு இந்த திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. ஏன் உலகம் முழுவதும் இந்த திட்டம் சென்று சேர்ந்துள்ளது.

இங்கிலாந்து நாட்டிலும் தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. காலை உணவுத் திட்டத்தின் வெற்றிக்கு சான்று இதைவிட வேறு ஏதாவது இருந்துவிட முடியுமா. மக்களுக்கான திட்டங்களை மட்டும் வகுத்து ஆட்சி நடத்தாமல் சமூக நீதியை காத்தும், மாநில உரிமைகளை மீட்டும் இந்தியாவிற்கே ஒரு முன்மாதிரியான முதலமைச்சராக இருந்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இந்த நான்கு ஆண்டில் தமிழ்நாட்டை தலைநிமிர வைத்த திட்டங்கள் இதோ:-

❖ விடியல் பயணத்திட்டம் !

❖ புதுமைப் பெண் திட்டம் !

❖ தமிழ்ப் புதல்வன் திட்டம் !

❖ நான் முதல்வன் திட்டம் !

❖ முதல்வரின் காலை உணவுத் திட்டம் !

❖ இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000/- வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் !

❖ தாழ்த்தப்பட்டவர்களைத் தொழில்முனைவோர் ஆக்கிடும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் !

❖ கலைஞர் கனவு இல்லம் திட்டம் !

❖ மக்கள் கோரிக்கைகளைக் குறிப்பிட்ட நாட்களுக்குள் தீர்க்க முதல்வரின் முகவரி திட்டம் !

❖ புதிய சிப்காட் தொழில் வளாகங்கள் !

❖ புதிய தொழிற்சாலைகள் !

❖ தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு மினி டைடல் பூங்காக்கள் !

❖ மகளிர் தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கடன் வழங்கித் தொழில் முதலாளிகளாக ஆக்குதல் !

❖ அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்ட நடைமுறையைச் செயல்படுத்தி திருக்கோவில்களில் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுடன் மகளிரை ஓதுவார்களாக நியமித்தல் !

❖ மீண்டும் மஞ்சப்பை!

❖ தாயுமானவர்!

❖ தோழி மகளிர் விடுதி!

❖ StartupTN!

❖ முதல்வரின் முகவரி!

❖ விண்வெளித் தொழில் கொள்கை 2025!

❖ ‘இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48’!

❖ கிராமந்தோறும் நூலகம்!

❖ தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம்!

❖ மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் நியமன பதவி!

நாடு போற்றும் நல்லாட்சி : தமிழ்நாட்டை தலைநிமிர வைத்த திராவிட நாயகர் மு.க.ஸ்டாலின்!
நாடு போற்றும் நல்லாட்சி : தமிழ்நாட்டை தலைநிமிர வைத்த திராவிட நாயகர் மு.க.ஸ்டாலின்!
நாடு போற்றும் நல்லாட்சி : தமிழ்நாட்டை தலைநிமிர வைத்த திராவிட நாயகர் மு.க.ஸ்டாலின்!
இந்த திட்டங்களோடு நின்று விடாமல் முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் மருத்துவத்திற்காகவும், மக்களின் போக்குவரத்திற்காகவும், தமிழர்களின் வீரத்தை உலகம் அறிவதற்காகமும் மிக மிக பிரம்மாண்டமான,

கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர் மருத்துவமனை

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முணையம்

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம்

கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலம்.

கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கம்

சென்னை கலைஞர் நூற்றாண்டு பூங்கா

கலைஞர் நினைவிட டிஜிட்டல் அருங்காட்சியகம்

கீழடி அருங்காட்சியகம் என தமிழ்நாட்டின் கட்டிடக்கலைகளை நாடறிய செய்து இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

கல்விக்கும், மருத்துவத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பதுபோல் இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்கும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது கழக அரசு. தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக உயர்த்த வெளிநாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டு உலகின் முன்னணி நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வைத்து இருக்கிறார்.

இந்த 4 ஆண்டில் 897 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.10.28 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 32.23 லட்சம் நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கல்வி, மருத்துவத்தில் முதலிடம் வகிப்பதுபோல் தொழில்துறையிலும் தமிழ்நாடு முதலிடம் பிடித்து சிறந்து விளங்கி வருகிறது.

மக்களை காப்பதோடு மட்டும் இல்லாமல் தமிழ்மொழியை காக்கவும் முன்கள போர் வீரராக நின்று களம் கண்டு வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மொழிப்போராட்டத்தில் அண்ணா வழியில் துணிச்சலுடன் நின்று, ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசின் சதித்திட்டங்களை முறியடித்து வருகிறார்.

மக்களுக்கான திட்டங்களை வகுப்பதாகட்டும், மாநில உரிமைக்காக குரல் எழுப்புவதாகட்டும் எல்லாவற்றுக்கும் முதலில் ஒலிக்கும் குரல் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் குரல்தான். அதனால்தான் இன்று தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கிறது! நிற்கும்!

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.