சென்னை:   புயல் நடவடிக்கைகள் குறித்து சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு  மேற்கொண்டதுடன், சில  மாவட்ட ஆட்சியர் களிடம் முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

பெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்க உள்ளதால், சென்னை உள்பட அண்டைய மாவட்டகளில் நேற்று முதல் கனத்த மழை பெய்து வருகிறது. சென்னையில் அதிகாலை முதல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், பல இடங்களில் மரங்கள் உடைந்து விழுந்தும், பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியும் காணப்படுகிறது. இதை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  சென்னை எழிலகத்தில்  அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்து  ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கலெக்டரிடம் கேட்டு அறிந்தார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்களிடம் நிலவரங்கள் கேட்டு அறிந்த முதலமைச்சர், மழை முன் எச்சரிக்கை பணிகளை துரிதப்படுத்துமாறு உத்தரவிட்டார்.

இதுகுறித்து செய்தியளார்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,  புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டறிந்தேன் என தெரிவித்தார்.

பேட்டி அளித்த அவர், “சென்னையில் இன்றிரவு முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆட்சியர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர்களுடன் முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தோம்,”இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் சென்னையில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது என்றவர், மழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருவதால், பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை என்றும் தெரிவித்தார்.