தருமபுரி: இன்று தருமபுரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்ட நீர் சுத்திகரிப்பு, நீரேற்று நிலையங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.

2நாள் பயணமாக சேலம், தருமபுரி மாவட்டத்தல் ஆய்வு செய்து வரும் முதலவர், இன்று காலை  தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் குழந்தைகள் அவசர சிகிச்சை மையக் கட்டடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.

தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 7 ஊராட்சிகளின் தலைவர்களுக்கு, முதல்வர் பாராட்டுச் சான்றிதழும் பரிசும் வழங்குகிறார். மேலும் பல்வேறு நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

அதையடுத்து,  ஒகேனக்கல் பகுதிக்கு  சென்று ஆய்வு நடத்தனார். ஒகனேக்கல் வனப்பகுதியில் யானைப்பள்ளம் என்ற இடத்தில் உள்ள ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்ட நீர் சுத்திகரிப்பு, நீரேற்று நிலையம் மற்றும் காவிரி ஆற்றில் தண்ணீர் உறிஞ்சும் நிலையங்களை பார்வையிட்டு, அது தொடர்பகா மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பிற்பகல் மூன்றரை மணிக்கு வத்தல்மலையில் உள்ள மலை கிராமத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, மலைவாழ் மக்களுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாட உள்ளார்.