சென்னை: சென்னை காமராஜர் சாலையில் ரூ.9.82 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சமூக நல இயக்குநர் அலுவலகக் கட்டடத்தை திறந்து வைத்தார்.  தொடர்ந்த நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேம்படுத்தப்பட்ட சாலைகள், புதிய மேம்பாலங்களை திறந்து வைத்தார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொளி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேம்படுத்தப்பட்ட சாலைகள், புதிய மேம்பாலங்களை திறந்து வைத்தார் .

தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் ரூ.280.73 கோடியில் இருவழித்தடமாக மேம்படுத்தப்பட்ட சாலை திறக்கப்பட்டது.திருவொற்றியூரில் பங்கிங்ஹாம் கால்வாய் குறுக்கே ரூ.58.64 கோடியில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் திறந்து வைத்தார்.