சென்னை: பொய் செய்தியை பரப்பியதாக முன்னாள் டிஜிபி மீது முதலமைச்சர் ஸ்டாலின் வழக்கு போட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஓய்வுபெற்ற முன்னாள் டிஜிபியும், அதிமுக முன்னாள் எம்எல்ஏவுமான நட்ராஜ், தனது எக்ஸ் தளத்தில், உண்மைக்கு புறம்பான செய்திகளை தொடர்ந்து பரப்பியதாக சர்ச்சை எழுந்தது. அவர் ஒரு தொலைக்காட்சியில், “இந்துக்கள் வாக்களித்ததுதான் வெற்றிபெற வேண்டுமென்றால் அப்படி ஒரு வெற்றி தேவையில்லை என கூறப்பட்டதாக வெளியான தகவலை பகிர்ந்திருந்தார்.
அதாவது அதே WhatsApp groupல் “இந்துக்கள் வாக்களித்ததுதான் வெற்றிபெற வேண்டுமென்றால் அப்படி ஒரு வெற்றி தேவையில்லை. இந்துக்கக்களின் வாக்குகளை பெறும் அளவிற்கு திராவிட முன்னேற்ற கழகம் தரம் தாழ்ந்துவிட வில்லை” என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாக தகவல் பகிரப்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.
முதலமைச்சர் சொல்லாத ஒரு செய்தியை சொல்லியதாக அதை @news7tamil செய்தி நிறுவனம் தன் செய்தி கார்டில் போட்டதை போல் ஒரு பொய்யான செய்தியை பரப்பி இருக்கிறார். அதை அனைவருக்கும் பரப்பவும் வலியுறுத்தி இருக்கிறார். மீண்டும் மீண்டும் இப்படி பொய்யையும் வதந்தியையும் பரப்பும் இவர்மீது கண்டிப்பாக தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், இதுதொடர்பாக திமுகவினர், காவல்துறையில் புகார் அளித்திருந்தனர். மேலும் முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தரப்பில் முன்னாள் டிஜிபி நட்ராஜ்மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், உயர் பொறுப்பில் இருந்த முன்னாள் போலீஸ் அதிகாரி, நான் சொல்லாத ஒன்றை என் பெயரில் வாட்ஸ் அப் மூலம் பரப்பி வருகிறார். அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.