நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள சேதங்களையும், சீரமைப்பு பணிகளையும் பார்வையிட சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்ற  தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று முற்பகல்  குமரி மாவட்டம் தோவாளை வந்து சேர்ந்தார். அங்கிருந்து முதலில் சேதமடைந்த பெரியகுளத்தை பார்வையிட்டு வருகிறார்.
வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு பகுதி, வளமண்ட சுழற்றி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், வட தமிழ்நாட்டின் உள்பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி (3.6 கிலோமீட்டர் உயரம்) காரணமாக வரும் இன்றுமுதல் 18-ந் தேதி வரை 4 நாட்களுக்கு மழை தொடரும் என்றும் என  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக குமரி மாவட்டத்தில் மழை கொட்டி வருகிறது.
தொடர்ந்து பெய்யும் கனமழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, வள்ளியாறு, பழைய ஆறு சிற்றார் அணைகளில் இருந்து வெளியேறும் உபரிநீரால் கோதையாறு, பரளியாறு, தாமிரபரணி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனால் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது.  ஆற்று வெள்ளம் அதிகரித்ததாலும், மழை நிற்காததாலும் சுமார் 150 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது. அருமநல்லூர், சுசீந்திரம், தேரூர், காட்டுப்புதூர் உள்ளிட்ட கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
இந்த நிலையில், bவள்ளத்தால் சூழப்பட்டு, தண்ணீரில் மிதக்கும்  கன்னியாகுமரி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.  வெ. தோவாளை, தேரேகால் புதூர் உள்ளிட்ட இடங்களில் கால்வாய் சீரமைப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, பேச்சிப்பாறை அணையைப் பார்வையிட்ட பின், மணவாளக்குறிச்சி, பெரியகுளம் உள்ளிட்ட இடங்களில் நீரில் மூழ்கிய பயிர்களை யும் முதலமைச்சர் பார்வையிடுகிறார். இன்று பிற்பகலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.