சென்னை: தேசிய சீனியர் கால்பந்து போட்டியில் வெற்றிபெற்ற மகளிர்அணியினர் வெற்றி பதக்கங்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

பஞ்சாப் மாநிலத்தில்  27ஆவது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் – 2023 போட்டி சமீபத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அணியும் பங்கேற்றது. இந்த போட்டியில்,  ஹரியானா மாநில அணியை எதிர்கொண்ட தமிழ்நாடு அணி 2-1 என்கிற கோல் கணக்கில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றது.  வெற்றி பெற்ற தமிழக அணியினருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில்,  வெற்றி பதக்கங்களுடன்  சென்னை திரும்பிய தமிழக கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு மாநில அரசு சார்பில்  வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து, தங்கக் கோப்பை வென்ற தமிழ்நாடு அணி வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் தமிழக தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது கால்பந்தாட்ட பயிற்சியாளர்கள், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பின் போது விளையாட்டு வீராங்கனைகள் முதல்வரிடம கோரிக்கை வைத்துள்ளனர். தங்களுக்கு அரசு வேலை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த  2018ஆம் ஆண்டு வெற்றி பெற்ற நிலையில்,  இந்தாண்டு தனது 2வது வெற்றியை தமிழக சீனியர் பெண்கள் கால்பந்தாட்ட அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.