சென்னை: தமிழ்நாட்டில் சாலை மற்றும் பாலப் பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து காலை 10:30 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக அமைச்சர்கள்,  தலைமைச்செயலபாளர் சிவதாஸ்மீனா மற்றும்  திட்ட அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், சாலை மற்றும் பாலப்பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும்,  தமிழக அரசு அறிவித்துள்ள பல்வேறு  திட்டங்கள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளன, அனைத்து மாவட்டங்களிலும் திட்டங்களின் நிலைப்பாடுகள் குறித்தும், விரைந்து முடிக்கப்படவேண்டிய திட்டங்களை துரிதப்படுத்தும் நோக்கிலும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே, 5 முறை இது போன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று 6வது முறையாக  மீண்டும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.