சென்னை: தமிழகத்தில் 18 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் இன்று மதியம் திருப்பூரில் தொடங்கி வைத்தார்.

நாடு முழுவதும் ஏற்கனவே 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், 18வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடும் திட்டம் மே 1ந்தேதி தொடங்கியது. தமிழகத்தில் தமிழகத்தில் 18 முதல் 44 வயது வரையிலான 3.6 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று தொடங்கப்பட்டு உள்ளது. தமிழக முதல்வவர் திருப்பூரில் தடுப்பூசி செலுத்தும்  தொடங்கி வைத்தார்.

திருப்பூரில் கொரோனா கள நிலவரம் குறித்து ஆய்வு செய்து வரும் முதல்வர் ஸ்டாலின், திருப்பூர் நேதாஜி பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாமில்  18+க்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.