சென்னை: பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, அவரது பிறந்த மண்ணான காஞ்சிபுரத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

 குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் இந்த திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி, 1.06 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில்,  மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கி வைத்ததுடன்,   13 பேருக்கு, அந்த திட்டத்தின் பயனை பெறுவதற்கான  ஏடிஎம் அட்டைகளை வழங்கினார்  வழங்கி வாழ்த்தினார். அத்துடன் அதுதொடர்பான குறிப்பேடும் வழங்கப்பட்டது.

அதில், பணத்தை எப்படி சேமிப்பது? ஏடிஎம் அட்டை வைத்து செய்யக்கூடாதவை என்ன என்பது குறித்து கையேடு வழங்கப்பட்டுள்ளது. கந்துவட்டிக்கு கடன் வாங்க வேண்டாம், அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு போலி நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டாம் என கையேட்டில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. செல்வ மகள், பொன்மகள் சேமிப்பு திட்டங்களில் பணத்தை சேமிக்க வேண்டும் என்றும் தொடர் சேமிப்பு திட்டம், நிலையான வாய்ப்பு திட்டத்தில் பணத்தை சேமிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின்படி 1கோடிக்கும் அதிகமான பெண்களின் வங்கி கணக்குகளுக்கு ரூ.1000 அனுப்ப வேண்டியதிருந்ததால்,  நேற்று முதல் பணம் அனுப்பும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது குறிப்பிடத்தது.

கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட திமுக தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம் தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்குவோம் என்று அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திமுக ஆட்சி அமைத்த நிலையில் கடந்த 2023-24ம் ஆண்டு பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்கு ரூ.7000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்தநாளையொட்டி காஞ்சிபுரத்தில் அவரது நினைவிடத்தில் உள்ள சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் 1.06 கோடி பெண்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும்.

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின்கீழ் 1.06 கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே மிகப்பெரிய பொருட்ச்செலவில் இத்திட்டத்தை தமிழ்நாடு அரசு தொடங்கி வைத்துள்ளது.