சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  4நாள் பயணமாக கொங்கு மண்டலத்துக்கு அரசு முறை பயணம் செல்கிறார். அப்போது ஏராளமான நலத்திட்ட உதவிகள், புதிய நிகழ்வு களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 23 முதல் ஆகஸ்ட் 26 வரை கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, வரும்  23 ஆம் தேதி  விமானம் மூலம் கோவை செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அடுத்த நாளான 24ந்தேதி அன்று கோவையில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிறார்.

24ந்தேதி மாலை பொள்ளாச்சியில் முதல்வர் முன்னிலையில் பிறகட்சியினர் திமுகவில் இணைகின்றனர்.  அதைத்தொடர்ந்து, 25ந்தேதி திருப்பூருக்கு பயணமாகிறார். அங்கு  சிறு, குறு சிறுவனங்கள் சார்பில் நடைபெறும் ‘தொழிலுக்கு தோள்கொடுப்போம்’ மாநாட்டில் கலந்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஈரோடு செல்லும் முதல்வர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.