சென்னை: நகர் ஊரமைப்பு இயக்ககத்தில் தேர்வுசெய்யப்பட்டுள்ள 27 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,  முதலமைச்சர்  ஸ்டாலின், நகர் ஊரமைப்பு இயக்ககத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வாயிலாக உதவி இயக்குநர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 27 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 2 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.