சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இவற்றில் குறிப்பிட்ட சில திட்டங்களை,  முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் என வகைப்படுத்தி, அதை முதலமைச்சர் ஸ்டாலின் தனது கண்காணிப்பில் செயல்படுத்தப்படுத்தி வருகிறார். இது தொடர்பாக  அவ்வப்போது,  அமைச்சர்கள், அதிகாரிகளுடன்  ஆலோசனை நடத்தி வருகிறார். இதுவரை 5 ஆலேசானை கூட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், இன்று 6வது முறையாக முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் தலைமைச்செயலகத்தில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், முக்கிய  அமைச்சர்களான கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், முத்துசாமி, தா.மோ.அன்பரசன், பெரிய கருப்பன், கயல்விழி செல்வராஜ், உதயநிதி   மற்றும் தலைமைச் செயலாளர்,  மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர். இதில், அந்த  திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக ர் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.