தருமபுரி: பாலக்கோட்டில் அதிகாலையில் வாக்கிங் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

தமிழ்நாட்டில் வருகிற 23-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாலை தக்காளி மார்க்கெட் பகுதிகளில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
பாலக்கோடு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்குமாருடன் அதிகாலை நடைபயணம் மேற்கண்ட முதலமைச்சர் பொதுமக்களிடம் உதய சூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். வீதிவீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சருடன் கைகுலுக்கியும் செல்பி எடுத்தும் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
[youtube-feed feed=1]