முதல்வர் ஜெயலலிதா முதலில் கையெழுத்து: டாஸ்மாக் நேரம் குறைப்பா.. மின் கட்டண சலுகையா

Must read

தேர்தலுக்கு முன்பே, “முதல் கையெழுத்து” என்கிற வார்த்தை பிரபலமாகிவிட்டது. ஆளாளகுக்கு “நான் முதல்வர் ஆனால் முதல் கையெழுத்து..” என்று பேசிய வசனங்களை இன்னமும் தமிழக மக்கள் வரவில்லை. அவர்களில் ஜெயலலிதா தவிர மற்றவர்கள் சொன்னது மதுவில்க்கு கொண்டுவரும் உத்தரவில்தான்.
நாளை நிஜயமாக (மீண்டும்)  முதல்வராகிவிட்ட  எந்த கோப்பில் கையெழுத்திடப்போகிறார் என்பதுதான் இப்போது கோட்டை வட்டாரத்தில் முக்கிய பேச்சாக இருக்கிறது.
100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில்தான் ஜெயலலிதா முதல் கையெழுத்திடப்போகிறார் என்று ஒரு பேச்சு உலவுகிறது.
தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்கு, ஒரு முறை வீடுகளில் மின் பயன்பாடு குறித்த கணக்கு எடுக்கப்படுகிறது. அதன்படி, வீடுகளில் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு, 1 -100 யூனிட்; 101 – 200; 201 – 500; 500 யூனிட்டுக்கு மேல் என்ற பிரிவுகளில், வெவ்வேறு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
500 யூனிட்டிற்கு குறைவாக  மின்சாரம் பயன்படுத்துவோருக்கு, 1 யூனிட்டுக்கு, மூன்று முதல், 4.60 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தப் பிரிவு நுகர்வோருக்கு, குறிப்பிட்ட தொகையை, தமிழக அரசு மானியமாக அளிக்கிறது.
ஆனால், 500 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்துவோர், மானியம் இல்லாமல் முழு கட்டணமும் அதாவது, 1 யூனிட்டுக்கு  6.60 ரூபாய் செலுத்த வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், லேப் – டாப் உள்ளிட்ட மின் சாதனங்கள் இருக்கின்றன. ஆகவே மின் பயன்பாடு அதிகமாகி, பல வீடுகளில் இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டிற்கு மேல் மின்சாரம் பயன்படுத்துபவர் எண்ணிக்கை கணிசமாக  உள்ளது.
ஆகவே நடுத்தரவர்க்கத்தினரும் மின் கட்டணத்தால் பெரும் அவதிக்கு ஆளாகிறார்கள்.
images
இதை உணர்ந்து , தி.மு.க., பாமக உள்ளிட்ட  பல கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில், ‘ஆட்சிக்கு வந்தால், மாதந்தோறும், மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படும்’ என்று  வாக்குறுதி அளித்திதன.
அதிமுக தேர்தல் அறிக்கையில், ‘தற்போதைய கணக்கீட்டு முறைப்படி, 100 யூனிட் மின்சாரம் வரை,  கட்டணம் ஏதும் இன்றி  இலவசமாகவழங்கப்படும்’ என அறிவிக்கப்பட்டது.
இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் கோப்பில் நாளை முதல் கையெழுத்திடப்போகிறார் என்று செய்தி பரவியிருக்கிறது. இது வரும் ஜூன் 1ம் தேதி முறை நடைமுறைக்கு வரும் என்றும் சொல்லப்படுகிறது.
இதற்கான கோப்புகளைத்தான் கோட்டையில் அரசு அதிராகரிகள் தயார் செய்து வருகிறார்கள் என்கிறார்கள்.
அதே நேரத்தில் இன்னொரு தகவலும் கோட்டை வட்டாரத்தில் உலவுகிறது.
“படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவரப்படும்” என்று ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தார் அல்லவா.. அதை நிறைவேற்றப்போகிறாராம்.
அதாவது தற்போது காலை 10 மணிக்கு திறக்கப்படும் டாஸமாக் மதுக்கடைகளை ஒரு மணி நேரம் தள்ளி, 11 மணிக்கு திறக்க உத்தரவிடும் கோப்பில் கையெழுத்திடுவார் என்கிறார்கள்.
மின்சார சலுகையா, டாஸ்மாக் கடை நேரம் குறைப்பா.. நாளை தெரிந்துவிடும்.

More articles

Latest article