சென்னை:

கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ள நீதிமன்றங்களை  மே 3ந்தேதிக்கு பிறகு திறப்பது குறித்து வரும் 29ந்தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலஅனைத்த  நீதிபதிகளிடம் காணொளி காட்சி மூலம் விவாதிக்க உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அறிவித்து உள்ளார்.

கொரோனா பரவல் தடுப்பு பணியாக நாடு முழுவதும் மே 3ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக நீதிமன்ற பணிகளும் முடங்கி உள்ளன. அத்தியாவசிய வழக்குகள் மட்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் காணொளி காட்சி மூலம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி (ஏபி சாஹி), ஏப்ரல் 29 ஆம் தேதி, அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த அனைத்து நீதிபதிகளிடமும்,  நீதிமன்றங்கள் செயல்படும் முறை குறித்து காணொளி காட்சி மூலம் விவாதிக்க இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

அன்றைய தினம், அனைத்து நீதிபதிகளும்  அவர்களின் குடியிருப்புகளிலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.