டெல்லி: இந்த வருட இறுதியில் நடைபெற உள்ள 5 மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து டெல்லியில்,  தலைமை தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்துகிறது.

சத்தீஷ்கர், தெலங்கானா, ராஜஸ்தான், மிசோரம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை காலம் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடைகிறது. இதையடுத்து இந்த 5 மாநிலங்களுக்கும் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் ஏற்கனவே தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ள நிலையில், அகில இந்திய தேர்தல் ஆணையமும் தன் பங்குக்கு சட்டமன்ற தேர்தலுக்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளத. இதுதொடர்பாக இன்று அகில இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்துகிறது.

தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் டெல்லியில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது. காவல் மற்றும் பொது-செலவின தேர்தல் பார்வையாளர்களுடன் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது. அதில், அமைதியான முறையில் தேர்தலை நடத்தி முடிப்பதற்கான வியூகங்கள் வகுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே,  5 மாநிலங்களிலும் தேர்தல் ஆணையம் சார்பிலான ஆய்வுப்பணிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று ஆலோசனை நடத்துகிறது. இந்த ஆலோசனைக்கு பிறகு, விரைவில் 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகள் வெளியாக வாய்ப்பு உள்ளது.

மிசோரம் மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் டிசம்பர் 17ம் தேதி முடிவடைய, மற்ற மாநில சட்டப்பேரவையின் ஆயுட்காலம் வரும் ஜனவரி மாதத்தில் வெவ்வேறு தேதிகளில் முடிவடைய உள்ளது.  தெலங்கானாவில் சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. சத்தீஷ்கர் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரசும், மிசோரமில் மிசோ தேசிய முன்னணி கட்சியும் ஆட்சி செய்கிறது. மத்திய பிரதேசத்தில் மட்டும் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.பரில் தேர்தல் நடைபெற வாய்ப்பு.