டில்லி

என்எக்ஸ் மீடியா முறைகேட்டில், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், உடல்நலக்குறைவை காரணம் காட்டி, இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று ஜாமீன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி ப.சிதம்பரத்தை அமலாக்கப்பிரிவு கடந்த 16-ம் தேதி கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.அவரது விசாரணை காலம் இன்றுடன் முடிவடைந்த நிலையில், மேலும் 14 நாள் நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், சிதம்பரத்தின் உடல்நிலை சரியில்லை என்பதை சுட்டிக்காட்டி, சிதம்பரம் தரப்பில் டெல்லி உயர்நீதி மன்றத்தில் கபில்சிபல் இடைக்கால ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், சிதம்பரத்துக்கு  21-ம் தேதியிலிருந்து பல முறை உடல்நலக் குறைவு ஏற்பட்டு உள்ளது. பல முறை  மருத்துவ மனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார்.  கடந்த 60 நாட்களுக்கும் மேலாக சிறையிலிருந்து வருவதால், அவரது உடல் எடை  73.5 கிலோவிலிருந்து 7.5 கிலோ குறைந்து, 66 கிலோவாகி உள்ளது. இதன் காரணமாக அவர் பலிவீனமாகி உள்ளார்.

தனக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக்குறைவுக்குச் சிகிச்சை எடுக்க ஐதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவ நிறுவனத்துக்குச் செல்ல வேண்டும். அதற்காக குறைந்தபட்சம் 6 நாட்கள் ஜாமீன் வழங்க வேண்டும். கடுமையான அடிவயிற்று வலி கடந்த 5-ம் தேதியில் இருப்பதால், அவசரமாக மருத்துவ சிகிச்சை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

வயிற்று வலிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் இரு முறை சிகிச்சை எடுத்தும் பலன் அளிக்கவில்லை. அங்குள்ள மருத்துவர்கள் கடந்த 7-ம் தேதியும், வலி நிவாரணி மாத்திரை வழங்கியும் பலனில்லை. 22ம் தேதி மீண்டும் மாற்று மருந்துகள்,மாத்திரைகள் வழங்கியும் வலி குறையவில்லை. அடுத்த கட்டமாக ராம் மனோகர் லோகியா மருத்துவமனையிலும் சிகிச்சையும், மருத்துவப் பரிசோதனையும் எடுத்தோம். அதில், அடுத்த 16 வாரங்களுக்கு ஸ்டீராய்ட் சிகிச்சை அளிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆதலால், ஏஜஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும். என்னுடைய மருத்துவச் சிகிச்சை அறிக்கையை வழக்கமாகப் பரிசோதிக்கும் மருத்துவருக்கு மின்அஞ்சல் மூலமாக அனுப்பினோம். அதில் வயிற்றுப்புண் அதிகமாகிவிட்டதால், உடனடியாக சிகிச்சையைத் தொடங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். என் உடல்நலக்குறைவால் உடல் எடை கடந்த 2 மாதங்களில் 7 கிலோ குறைந்துவிட்டது.

மேலும், குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்.   சிதம்பரத்துக்கு ஜீரணக் கோளாறு, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் உள்பட பல்வேறு சிக்கல்கள் உள்ளது என்று கூறப்பட்டு உள்ளது.

இந்த ஜாமீன் மனுமீதான விசாரணை  டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என்.படேல், நீதிபதி சி. ஹரிசங்கர் ஆகியோர் முன் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

ஏற்கனவே சிதம்பரத்துக்கு, திகார் சிறையில் வழங்கப்படும் உணவு சிதம்பரத்தின் உடலுக்கு ஒத்துழைக்கவில்லை என்பதால், உடல்நலம் கருதி,ஒருவேளை மட்டும்  வீட்டு உணவை  வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.