சென்னை:

சிறப்பு ரயில்களில் சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்க உத்தரவிட்ட ரயில்வே நிர்வாகத்தை கண்டிப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணத்தை அந்தந்த மாநில காங்கிரஸ் கமிட்டி வழங்கும் என சோனியா காந்தி தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்த ரயில்வே அமைச்சகம், கட்டணத்தில் 85 சதவீதத்தை மானியமாக மத்திய அரசு வழங்குவதாகவும், மீதமுள்ள 15 சதவீதத்தை மாநில அரசுகள் வழங்கலாம் அல்லது தொழிலாளர்களிடம் வசூலிக்கலாம் எனவும் தெரிவித்தது.

இந்நிலையில், டுவிட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் அமைச்சர் சிதம்பரம், ரயில்வே வாரியம் கடந்த 2-ம் தேதி வெளியிட்ட உத்தரவில், மானியம் குறித்து குறிப்பிடவில்லை என்றும், கட்டணத்தை தொழிலாளர்களிடம் மாநில அரசுகள் வசூலிக்க வேண்டும் என்றே குறிப்பிட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார். எப்போதும் இருந்த இயல்பான மானியங்களை கூறி திசை திருப்ப வேண்டாம் என்றும் சிதம்பரம் கேட்டுக் கொண்டுள்ளார்.