சேலம்:

சேலம் மாவட்டத்தில் வரும் 17-ஆம் தேதி வரை கடைகளை திறக்க அனுமதியில்லை என்று மாவட்ட ஆட்சி தலைவர் ராமன் தெரிவித்துள்ளார்.


சேலத்தில் தொழில் நிறுவனங்கள், வணிக கடைகளை நாளை முதல் இயக்க அனுமதி வழங்கி மாவட்ட ஆட்சியர் ராமன் உத்தரவிட்டிருந்தார். மேலும் பெரு நிறுவனங்கள், தங்கள் ஆலைகளை இயக்கிட சேலம் மாவட்ட ஆட்சியருக்கு slmdic@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் சேலம் மாவட்டத்தில் வரும் 17-ஆம் தேதி வரை கடைகளை திறக்க அனுமதியில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ராமன் தெரிவிக்கையில், சேலம் மாவட்டத்தில் துணி, நகை, செல்போன் கடைகள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக், பர்னிச்சர் விற்பனை கடைகள் மற்றும் ஏசி வசதியுள்ள அனைத்து விதமான கடைகள் ஆகியவற்றை வரும் 17ஆம் தேதி வரை திறக்க அனுமதியில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி சேலம் தலைவாசல் தினசரி காய்கறி சந்தை ஞாயிறு வரை மூட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.