சென்னையில் இன்று முதல் தனிக்கடைகள் திறக்க அனுமதி…

Must read

சென்னை:
சென்னையில் இன்று முதல் தனிக்கடைகளை திறக்க மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இருந்தாலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் சிக்கல் இருந்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் நாளை முதல் தனிக்கடைகள் திறக்கலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.  ஆனால் இன்று திறக்கப்படும் கடைகள் ஏசி இல்லாமல் இயங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேசமயம் ஷாப்பிங் மால்கள், வணிக வளாகங்கள் திறக்க அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article