சென்னை:

சிதம்பரம் நடராஜர் கோயிலில் அர்ச்சணை செய்யச்சொன்ன பெண் பக்தரை தாக்கிய தீட்சிதர் தர்ஷனுக்கு சென்னை உயர்நீதி மன்றம்  நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த மாதம் (நவம்பர்) 16-ம் தேதி இரவு முக்குருணி விநாயகர் சன்னதியில் அர்ச்சனை செய்ய கோரிய பெண்ணை தீட்சிதர் ஒருவர் தாக்கிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்த நிலையில், தலைமறைவான நிலையில், தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று, சென்னை உயர்நீதி மன்றத்தல் தீட்சிதர் தரப்பில் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், கோவில் நடை அடைக்கும் நேரத்தில் வந்து பூஜை செய்ய வேண்டும் என அந்த பெண் தகராறு செய்ததாகவும், ஒரு கட்டத்தில் தன்னை நோக்கி கையை தூக்கியதால், தான் தற்காப்புக்காக தள்ளி விட்டதாகவும், தனக்கெதிராக போலீசார் பொய் வழக்கு போட்டிருப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

அந்த மனுமீதான விசாரணை கடந்த மாதம் (நவம்வர்) 27ந்தேதி விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சி.வி கார்த்திகேயன், அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.

அதன்படி வழக்கு இன்று மீண்டும்விசாரணைக்கு வந்தது. விசாரணையைத் தொடர்ந்து, தீட்சிதருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கிய உயர்நீதி மன்றம்,  15 நாட்கள் ராமேஸ்வரத்தில் தங்கி குற்றவியல் நடுவர் முன் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டது.