சென்னை:
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான முன் ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்த ஆண்டு தமிழ்நாட்டில், அதுவும் கடற்கரை மாவட்டமான மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிகள் ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆக.10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக நடத்த, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முன் ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒலிம்பியாட் தொடருக்கான தொடக்க விழா ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.