1996 ஜீன் மாதம் சென்னையில் தொடர்ந்து மூன்று நாட்களில் 70 செ.மீ மழை பதிவானது.

ஜீன் 14 ஒரே நாளில் 35 செ.மீ. மழை பதிவாகி கோடை காலத்தில் அதிலும் ஜீன் மாதத்தில் பதிவான அதிகபட்ச மழை என்று வரலாற்றில் பதிவானது.

கோடையில் சென்னைக்கு நீர் ஆதாரமாக விளங்கும் நீர்நிலைகள் எதுவும் திறக்கப்படாத நிலையிலும் சென்னையின் மையப்பகுதியான ஜெமினி மேம்பாலம் முதல் நகரின் அனைத்து தாழ்வான பகுதிகளும் தண்ணீரில் தத்தளித்தது.

27 ஆண்டுகள் ஆன நிலையில் ஆட்சிகள் மாறிய நிலையிலும் காட்சி மட்டும் மாறவேயில்லை.

இதில் இம்முறை மழைக்காலத்தில் கூடுதலாக ஏரி நீரும் சேர்ந்து கொண்டதால் சென்னை மட்டுமன்றி அதன் புறநகர் பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

20 செ.மீ. மழை பதிவானாலும் மழை நீர் வடியும் அளவிற்கு மழைநீர் வடிகாலுக்காக பல்வேறு காலகட்டத்தில் பல ஆயிரம் கோடி செலவிடப்பட்ட போதும் ஏரி நீருடன் சேர்ந்து அத்தனை செ.மீ. மழை நீரும் எத்தனை மணி நேரத்தில் வடிய வேண்டும் என்று திட்டமிடாததையே சென்னை வெள்ளம் நிரூபிக்கிறது.

மேலும் தொழிற்சாலைகள், ஐ.டி. நிறுவனங்கள் என அனைத்தையும் சென்னை நகரை மட்டுமே மையப்படுத்திய வளர்ச்சியால் புறநகரங்கள் நீரில் மூழ்கியுள்ளதைப் பார்த்து பிறநகரங்கள் கேலி செய்யும் அளவிற்கு உள்ளது.

சரியான திட்டமில்லாமல் இன்னும் எத்தனை கோடி கொட்டி சென்னையை முன்னிலைப்படுத்த முயற்சித்தாலும் சென்னை மீண்டும் மீண்டும் தன் உயரம் இதுதான் என்று நிரூபிக்கத் தவறாது என்பதே ஒட்டுமொத்த சென்னை மக்களின் கருத்தாக உள்ளது.

அதேவேளையில் இந்தியாவில் தொழில்நுட்பங்கள் அதிகரித்துள்ள போதும் ஒருசில உயிர்களைக் காப்பாற்றவே பலநாட்கள் போராட வேண்டிய சூழ்நிலை உள்ள போதும் மழை வெள்ள இயற்கைச் சீற்றத்தில் இருந்து கோடிக்கணக்கான உயிர்களை பாதுகாப்பாக மீட்ட தமிழக அரசையும் பாராட்டி வருகின்றனர்.